மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் காற்று வெளியிடை ரிலீஸ்
சினிமாவில் நடிப்பதற்கு முன் நடிகர் கார்த்தி மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக வேலை செய்தவர். தற்போது முதன் முதலாக அவரது இயக்கத்தில் காற்று வெளியிடை என்னும் படத்தில் நடிக்கிறார் கார்த்தி.
இவர் நடிகராக வருவதற்கு அவரும் ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லலாம். கார்த்தி, அதிதி ராவ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்.ஜெ.பாலாஜி ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்துள்ளது.
ஊட்டி, சென்னை என எடுக்கப்பட்ட ஷூட்டிங் காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் கார்த்தி நடிக்கும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது.
பாடல்களும் நிறைவு பெற்று இப்போது எடிட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. விரைவில் மார்ச் 2017 ல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
கார்த்திக்கு இப்படத்தில் சவாலான வேடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் விமானம் ஓட்டும் பயிற்சியை கடுமையாக எடுத்துக்கொண்டார்.இதனால் அவருடைய படங்களி...
