2017ம் ஆண்டின் சிறந்த படங்களில் எங்கள் கிடாயின் கருணை மனுவும் அடங்கும்
ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்றவாறும், அவர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்வதும் ஒவ்வொரு படைப்பாளிக்கும் சவாலான காரியமாகவே இருக்கின்றது. அதற்கு முக்கிய காரணம் ரசிகர்கள் உலக சினிமா மீது வைத்திருக்கும் பேரார்வம் தான். தற்போது அவர்களின் ரசனைகளை 'ஒரு கிடாயின் கருணை மனு' படம் முழுமையாக பூர்த்தி செய்ய தயாராக இருக்கின்றது, நல்ல தரமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து தயாரித்து வரும் 'ஈரோஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம். அறிமுக இயக்குநர் சுரேஷ் சங்கையா (காக்கா முட்டை புகழ் மணிகண்டனின் உதவியாளர்) இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் விதார்த் மற்றும் பிரபல டப்பிங் கலைஞர் ரவீணா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
"நகைச்சுவை மற்றும் செண்டிமெண்ட் என இரண்டின் கலவையில் மிக அழகாக உருவாகி இருக்கும் எங்களின் 'ஒரு கிடாயின் கருணை மனு' திரைப்படம், வருக...