Tag: #kiraganam #kayalchandran #krishna #karunaas #ilan #karunakaran #jayaprakash #nanthini #singaporedeepan

ஒரு இருளில் ஒரு மணி நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை திகுலுடன் சொல்லும் படம் கிரகணம்
தமிழ் சினிமாவுக்கு தற்போது பொற்காலம் என்று தான் சொல்லணும் அதற்கு முக்கிய காரணம் புதிய இளைஞர்கள் இயக்குனர் அவதாரம் தான் சிறந்த படைப்பு நேர்த்தியான கதைகள் அற்புதமான திரைக்கதைகள் தான் இன்று வெற்றி படங்களாக அமைகிறது. குறிப்பாக துருவங்கள் 16, மாநகரம், போன்றபடங்கள் தான் உதாரணம். அந்த வரிசையில் மேலும் ஒரு புதிய இயக்குனர் என்று தான் சொல்லணும்.காரணம் ஒரு படத்தின் கதை தரம் வெற்றி எல்லாமே அந்த படத்தின் போஸ்டர் சொல்லிவிடும். அந்த வகையில் படத்தின் போஸ்டர்ஸ் மற்றும் நட்சித்திரங்கள் எல்லாமே அருமையான ஒரு காம்போவுடன் வருகிறார் கிரகணம் படத்தின் இயக்குனர்.
தமிழ் சினிமா எப்போதும் இளம் இயக்குநர்களால் புதுப்புது வடிவம் எடுக்கும் அந்த வகையில் கிரகணம் ஒரு புதிய கோணத்தில் சொல்லப்படும் ஒரு புதிய கதை என்கிறார் இயக்குநர் இளன், இப்படத்தின் கதையைப்பற்றி அவர் கூறுகையில்
சந்திர கிரகணம் நிகழும் ஓர்நாள் இர...