மாமன் – திரைப்பட விமர்சனம் (மாமன் நம் சொந்தம்) Rank 4/5
மாமன் - திரைப்பட விமர்சனம்
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அற்புதமான ஒரு குடும்ப காவியம் என்று சொல்லலாம் பிரவின் பாலத்தை உறவின் தனித்துவத்தை மகத்துவத்தை மிக அற்புதமாக இந்த படத்தில் இயக்குனர் பாண்டியராஜ் வெளிப்படுத்தி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதைவிட இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் வாழ்ந்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் அற்புதமான ஒரு வாழ்வியலை மிக நேர்த்தியாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாண்டியராஜன்.
விலங்கு வெப் சீரிஸ் புகழ் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சூரி ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இவர்களுடன் லப்பர் பந்து புகழ் சுவாசிகா, பாபா பாஸ்கர், ராஜ்கிரண், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தாய் மாமனுக்கும் மருமகனுக்கும் இடையிலான உறவை குடும்பங்கள் கொண்டாடும் விதமாக உணர்வுபூர்வமாக இந்த படம் பேச இர...
