
மருதம் – திரைவிமர்சனம் (குறிஞ்சி) Rank 4/5
மருதம் - திரைவிமர்சனம்
விதார்த் படம் என்றாலே ஒரு தரமான படமாக தான் இருக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை அதுபோல தான் இந்த மருதம் திரைப்படம் அறிமுக இயக்குனர் V. கஜேந்திரனின் அட்டகாசம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக இந்த படத்தை உருவாக்கி இருக்கார்.
இந்த படத்தில் விதார்த், ரக்ஷனா, அருள்தாஸ், மாறன், தினந்தோறும் நாகராஜ் சரவண சுப்பையா மற்றும் பலர் நடிப்பில் வி கஜேந்திரன் இயக்கத்தில் என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் அருண் கே சோமசுந்தரம் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி இருக்கிறது.
விவசாயம் தான் தன் உயிர் தன் வேள்வி என்று உழைப்பவர். விதார்த் இவர் பரம்பரையின் நிலத்தையில் விவசாயம் செய்து வருகிறார் அதுவும் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். விவசாயம் செய்து தன் குடும்பத்தை மிக சந்தோஷமாக வைத்திருக்க முடியும் என்று உதாரணமாக அந்த கிராமத்துக்கே வாழ்பவர். அப்படிப்பட்ட அவர் அவருக்கு நிலத்...