Saturday, April 18
Shadow

Tag: #mersal #vijay #atlee #review #samatha #kajalagrwal

மெர்சல் – திரைவிமர்சனம்  ( தெரிக்கவிடும் ) Rank 4/5

மெர்சல் – திரைவிமர்சனம் ( தெரிக்கவிடும் ) Rank 4/5

Review
மெர்சல் உலக தமிழ்ர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா அட்லி, என்றால் நிச்சயம், என்று தான் சொல்லணும். படம் ஆரம்பம் முதல் இறுதிவரைக்கும் விஜய்யின் ராஜ்ஜியம் மட்டும் தான் என்று சொல்லணும். விஜய்க்கு அட்லி கிடைத்த மாபெரும் கலை சொத்து என்று கூறலாம் ஒவ்வொரு காட்சியும் விஜய்க்கு அமைத்தது போலவே இருந்தது ஒரு விதத்தில் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் மூன்று விஜய்யும் மூன்று விதம் என்று தான் சொல்லணும் அப்பா வெற்றிமாறன் அவரின் மகன்களாக வெற்றி - மாறன் என்ற இருமகன்கள். இந்த மூன்று கதாபாத்திரமும் மிக வித்தியாசமாக அமைத்துள்ளார். மருத்துவமனையில் இன்று நடக்கும் மோசடி தான் கதை. இலவச மருத்துவம் தரும் மாறன் இதனால் வெறும் ஐந்து ருபாய் வாங்கி கொண்டு மருத்துவம் பார்ப்பவர். மேஜிக் செய்யும் வெற்றி, இவர் கொஞ்சம் வித்தியசமானவர். மாறன் அமைதியானவர் வெற்றி கொஞ்சம் ஆவேசமானவர் இவர்களின் உதவியாளர் வடிவேலு, ...