மெசஞ்சர் – திரை விமர்சனம் Rank 2.5/5
மெசஞ்சர் – திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் காதல் கதைகள் எண்ணற்றவை. ஆனால் ‘மெசஞ்சர்’ படம், அந்த வழக்கமான காதல் கதைகளில் இருந்து சற்று வித்தியாசமான திருப்பத்துடன் வருகிறது.
படத்தின் கதை — ஐடி ஊழியரான ஸ்ரீராம் கார்த்திக் காதலி வேறொருவரை திருமணம் செய்து கொள்வதால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்ய முயல்கிறார். அந்த நேரத்தில், பேஸ்புக் மெசஞ்சர் மூலம் “நான் ஏற்கனவே இறந்துவிட்டேன், ஆனாலும் உங்களை ரொம்ப பிடிக்கும்” என்ற ஒரு மெசேஜ் வருவது கதைக்கு ஆச்சரியமான துவக்கமாக அமைகிறது. அந்த செய்தியின் மர்மத்தை தீர்க்க நாயகன் நாயகியின் ஊருக்குச் செல்கிறார், அங்கு அவர் உண்மையிலேயே இறந்துவிட்டார் என்பது வெளிப்படுகிறது. பின்னர் அவள்மீது நாயகனுக்கே காதல் பிறக்க, திருமணம் செய்வதும், அதன் பின் நிகழ்வதும் கதை மையம்.
இயக்குனர், நம்ப முடியாத கற்பனையைக் கொண்டு ஒரு காதல் கதையை உருவாக்கியுள்ளார். இந்த கதை நடைமுற...
