‘மிடில் கிளாஸ்’ – திரை விமர்சனம் (Rank 3.5/5)
‘மிடில் கிளாஸ்’ – ஒரு சாதாரண குடும்பத்தின் கனவுகளையும் போராட்டங்களையும் சொல்வது
சென்னையில் வசிக்கும் நடுத்தர குடும்பத் தலைவர் முனீஸ்காந்த். அவரின் மனைவி விஜயலட்சுமியின் நீண்ட நாள் கனவு — எப்படியாவது ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும். ஆனால் முனீஸ்காந்தின் ஆசை வேறொரு திசை; சொந்த ஊருக்குத் திரும்பி விவசாயம் செய்து செட்டில் ஆக வேண்டும் என்பதே அவரது கனவு.
இந்த இருவரின் வாழ்க்கையிலும் ஒரு நாள் அதிர்ஷ்டம் தட்டிக்கொடுக்கிறது. ஆனால் அதனுடன் ஒரு பெரிய சிக்கலும் உருவாகிறது. அந்த சிக்கலை சமாளித்து, வாழ்க்கையில் அவர்கள் வெற்றியை அடைந்தார்களா என்பதுதான் படத்தின் மையக்கரு.
முனீஸ்காந்த், நடுத்தர குடும்பத் தலைவனாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். உடல் மொழி, உணர்ச்சி வெளிப்பாடு என அனைத்திலும் அவர் சிறப்பாகத் திகழ்கிறார். குறிப்பாக கிளைமேக்ஸ் சீனில் அவர் கொடுத்திருக்கும் தீவிரமான நடிப்பு பாராட...
