‘பராசக்தி’ – திரைவிமர்சனம் Rank 4/5
‘பராசக்தி’ – வரலாற்றின் குரலை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் ஒரு சினிமா ஆவணம்.
தமிழ் சினிமாவில் சில படங்கள் காலத்தை வெல்லும். சில படங்கள் காலத்தோடு பேசும். அதிலும் அரிதாக சில படங்கள் காலத்தையே மீண்டும் உயிர்ப்பிக்கும். அந்த வரிசையில் நிற்கும் படமாக ‘பராசக்தி’ உருவாகியுள்ளது என்று தைரியமாகச் சொல்லலாம்.
சிவகார்த்திகேயனின் 25-வது படம், ஜி.வி.பிரகாஷ் குமாரின் 100-வது இசையமைப்பு, சுதா கொங்கராவின் அழுத்தமான எழுத்து-இயக்கம் – இந்த மூன்று காரணங்களே இந்தப் படத்தை ஒரு சாதாரண பீரியட் படமாக இல்லாமல், ஒரு வரலாற்றுச் சினிமா நிகழ்வாக மாற்றுகின்றன.
இந்த படம் ஒரு மொழியைப் பற்றிய படம் மட்டும் அல்ல. அது ஒரு இனத்தின் அடையாளம், உரிமை, தியாகம், கண்ணீர், போராட்டம் ஆகியவற்றின் கதை. “மொழி என்பது தகவல் பரிமாற்றத்துக்கான கருவி மட்டுமல்ல; அது ஒரு கலாச்சாரம், ஒரு அடையாளம், ஒரு உயிர்” என்பதை ஒவ்வொரு காட...
