
ஒரு படம் தனக்கு தேவையான விஷயங்களை தானே எடுத்துக் கொள்ளும்”, சொல்கிறார் இயக்குனர் தனுஷ்.
ஒரு படம் தனக்கு தேவையான விஷயங்களை தானே எடுத்துக் கொள்ளும்", சொல்கிறார் இயக்குனர் தனுஷ்.
நடிகர் தனுஷ் முதன் முறையாக இயக்குனராக களமிறங்கும் படம் பவர்பாண்டி தற்போது ப. பாண்டி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இப்படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் நடிகை ரேவதி, பிரசன்னா,சாயா சிங்,செண்ட்ராயன் உள்பட பல நடிகர்கள் இணைந்துள்ளனர்.
இன்று இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
விழாவில் பேசிய இயக்குனர் தனுஷ், “உலகத்தில் நம் வாழ்க்கையில் அன்பு, நிம்மதி, பாசம், கோபம் என்ற பல விஷயங்கள் நம்மைச் சுற்றி உள்ளன. இதில் பாஸிட்டிவ் விஷயங்கள் அதாவது நன்மையான விஷயங்களை மட்டுமே எடுத்து கொள்வது தான் இந்த ப. பாண்டி திரைப்படம். இயக்குனர் பாலுமகேந்திரா எப்போதும் கூறும் விஷயம், ஒரு படம் தனக்கு தேவையான விஷயங்களை தானே எடுத்துக் கொள்ளும். அப்படி ...