கடவுள் இருக்கான் குமாரு – திரைவிமர்சனம் நிச்சயம் குமார் உங்களை சிரிக்க வைப்பான்
ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி M. S.பாஸ்கர், ஊர்வசி, சிங்கம் புலி, ரோபோ சங்கர், பிரகாஷ்ராஜ் கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், ஐஸ்வர்யா, மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்துக்கு ஹீரோ ஜி.வி.பிரகாஷ் தான் இசையும் படத்தை அம்மா கிரியேஷன் T.சிவா இந்த படத்தை தயாரித்துள்ளார். முக்கோண காதல் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் தான் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படம் இன்று வெளியாகியுள்ளது. ராஜேஷ் – ஆர்.ஜே.பாலாஜி கூட்டணி என்பதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
அந்த எதிர்பார்ப்பு படம் ஆரம்பித்த முதல் காட்சில் இருந்து கடைசி காட்சி வரை அதை இயக்குனர் ராஜேஷ் நிலைநிறுத்தியுள்ளார் என்று சொல்லணும். விழுந்து விழுந்து ஆனந்தியை காதலிக்கிறார் ஜி.வி. இருவருக்கும் காதல் ஏற்படுகிறது மதம் என்ற போர்வையில் காதலை பிரிக்கிறார் M. S.பாஸ்கர் இதனால் பிரிந்த காதல் மீண்டும் எப்படி சேருகிறார்கள்...

