Saturday, November 9
Shadow

Tag: #rajinikanth #kalaa #2.0 #shankar#ranjith rajinifans

ரஜினி ரசிகர்களுக்கு அடுத்தவருடம் கொண்டாட்டம் எப்படி தெரியுமா

ரஜினி ரசிகர்களுக்கு அடுத்தவருடம் கொண்டாட்டம் எப்படி தெரியுமா

Latest News
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவர உள்ள இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம் "2.o". இந்த படத்தின் வெளியீட்டு தேதி 2018 ஏப்ரல் 27 என்று அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனமான லைகா சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்நிலையில் கபாலி திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ரஞ்சித் அவர்களும் இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் " காலா". இந்த படத்தின் பெருவாரியான படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.இந்நிலையில் "காலா" படத்தை 2018 ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.இதனால் ஒரே வருடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இரு படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்....