
என்னுடைய தந்தை ஒரு படத்தை வெளியிட முடியாமல் பிச்சை எடுப்பதை பார்த்தேன் – விஷால்
என்னுடைய தந்தை ஒரு படத்தை வெளியிட முடியாமல் பிச்சை எடுப்பதை பார்த்தேன் அதனால் தான் இந்த தேர்தலில் நிற்கிறேன் – விஷால் !!!
பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று விஷால் பேசியது ,
இந்த அணி இங்கு வந்திருப்பதரக்கான காரணம் நல்லது செய்வதற்காக தான். நல்லது செய்வது என்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. நளிந்து என்ற ஒரு பிரிவை போக்குவதற்காக தான் இந்த அணி இங்கு அமர்ந்துள்ளார்கள். தமிழ் திரைப்பட உலகில் பொதுவாகவே பல சங்கங்கள் உள்ளன. அதில் நடிகர் சங்கத்தை எடுத்துக்கொண்டால் அவர்கள் அச்சங்க உறுப்பினர்களுக்கு செய்யும் நல்ல விஷயங்கள் அனைத்தும் அவர்களை மட்டுமே சேர்ந்து அடையும். ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தை பொறுத்தவரை நாம் செய்யும் நல்ல விஷயங்கள் அனைத்தும் தமிழ் திரையுலகத்தில் உள்ள அனைவரையும் சென்றடையும். தயாரிப்பாளர் சங்கம் நன்றாக இருந்தால் தமிழ் திரையுலகமே நன்றாக இருக்கும். தயாரிப்பாளர் சங்கத்தில் கடந்த பத்து வர...