Tag: #sakkapodumachan #santhanam #vtvganesh #aniruth #str #simbu #trajender #usha #sanjanasing #vivek #
‘சக்க போடு போடு ராஜா’ படம் மூலம் மாஸ் ஹீரோவாக களம் இறங்கும் சந்தானம்
வி.டி.வி.கணேஷ் தயாரிப்பில் சந்தானம், வைபவி சாண்டில்யா கதாநாயகன் கதாநாயகியாக நடிக்க, முக்கிய பாத்திரத்தில் விவேக்கும் நடித்திருக்கும் படம் ‘சக்க போடு போடு ராஜா.’ ‘லொள்ளு சபா’ புகழ் சேதுராமன் முதன் முதலாக இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு சிம்பு இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சற்றுமுன் சென்னையில் நடைபெற்றது.
அப்போது நடிகர் விவேக் பேசும்போது, ‘‘ஒரு காமெடியன் இன்னொரு காமெடியனை வைத்து படமெடுப்பது அவ்வளவு எளிதில் நடந்து விடாது. அது இந்த படத்தில் நடந்துள்ளது. இது மாதிரி இரண்டு மேஜர் காமெடியன்கள் ஒரு படத்தில் இணைந்து நடித்து பல நாட்களாகி விட்டது. இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு படத்தில் காதல், சென்டிமெண்ட், ஆக்ஷன் என்று பல வேலைகள் இருந்தாலும் காமெடி போர்ஷனும் இருக்கிறது. அவருக்கென்று ஒரு போர்ஷனை உருவாக்கியது மாதிரி எனக்கும் ஒரு ஏரியாவை பிரித்...
பட்டையைகிளப்பும் `சக்க போடு போடு ராஜா’ படத்தின் கலக்கு மச்சா பாடல்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது நாயகனாக பிசியாகி இருக்கிறார் நடிகர் சந்தானம். இதே சந்தானம் நடிப்பில் `சர்வர் சுந்தரம்’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், சந்தானம் தற்போது `சக்க போடு போடு ராஜா’, `ஓடி ஓடி உழைக்கனும்’, `மன்னவன் வந்தானடி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் சேதுராமன் இயக்கத்தில் உருவாகி வரும் `சக்க போடு போடு ராஜா’ படத்தில் சந்தானம் ஜோடியாக வைபவி சாண்டில்யா நடிக்கிறார். விவேக், சம்பத் ராஜ், ஆர்யன், வி.டி.வி. கணேஷ், ரோபோ ஷங்கர், சஞ்சனா சிங் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
.மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமான முறையில் தயாராகும் படம் .கதாநாயகன் சந்தானம் அறிமுக பாடல் காட்சியில் சமீபத்தில் படமாக்கபட்டது. அதிலும் முதல் முறையாக ஐந்து பிரபல நடன இயக்குனர்களான ராஜு சுந்தரம் , ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி ஆகியோர் இப்பாடலுக்கு பணியாற்றினார்.
...

