ராகவா லாரன்சுக்கு கொடுக்கப்பட்ட சர்ப்ரைஸ் தான் மக்கள் சூப்பர்ஸ்டார்- இயக்குனர் சாய் ரமணி
ராகவா லாரன்ஸ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் டைட்டில் கார்டில் ராகவா லாரன்சுக்கு ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் அடைமொழியாக கொடுக்கப்பட்டிருந்தது. ராகவா லாரன்சுக்கு கொடுக்கப்பட்ட இந்த அடைமொழி பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
ராகவா லாரன்ஸ் எப்போதும் புகழ்ச்சியை விரும்பாதவர். அப்படிப்பட்டவர், இப்படி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்டு விட்டாரே என்ற ஆதங்கமும் பலருக்கு இருந்து வந்தது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிடும்போது, நீங்கள் அனைவரும் எனது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். இந்த திரைப்படத்தின் இயக்குனர் இன்று எனக்கு இன்ப அதிர்ச்சி தருவேன் என்று கூறினார். அது என்னவென்று படத்தை பார்க்கும்போதுதான் நான் கண்டேன். எனது பெயருக்...
