“விழித்திரு படத்தின் கதையை கூட கேட்காமல் என் மீது இருக்கும் நம்பிக்கையால் படம் வாங்கினார் விடியல் ராஜு
கிருஷ்ணா - வித்தார்த் - வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் 'விழித்திரு'.
ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இயக்குநர் மீரா கதிரவன் உருவாக்கி இருக்கும் இந்த விழித்திரு படத்தை 'ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்' சார்பில் மீரா கதிரவனும் அவருடைய நண்பர்களும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். விழித்திரு படத்தின் விநியோக உரிமையை 'சவுந்தர்யன் பிச்சர்ஸ்' சார்பில் வாங்கி இருக்கும் விடியல் ராஜு, இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
'விழித்திரு' திரைப்படத்தில் டி.ராஜேந்தர், சுப்ரமண்ய நந்தி மற்றும் தமயந்தி எழுதிய பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கம். அது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் முதல் முறையாக டி.ராஜேந்தர், விஜய் ஆண்டனி,ஜி.வி. பிரகாஷ்குமார், சந்தோஷ் நாராயணன், எஸ்.எஸ்.தமன்,சி.ச...
