‘ஆசை வரமே’ எனும் இனிய மெலடியில் காதலைப் பேசும் ‘அன்பில் அவன்’ – அசோக் செல்வன் படத்தின் முதல் பாடல் வெளியீடு!
‘ஆசை வரமே’ எனும் இனிய மெலடியில் காதலைப் பேசும் ‘அன்பில் அவன்’ – அசோக் செல்வன் படத்தின் முதல் பாடல் வெளியீடு!
சென்னை: இளம் தலைமுறையின் காதல் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகி வரும் அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஆசை வரமே’ வெளியாகி, இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
காதல் என்றாலே கொண்டாட்டம் மட்டுமல்ல; அதில் இருக்கும் நெருக்கம், எதிர்பார்ப்பு, செல்லச் சண்டை, ஊடல் என பலவிதமான உணர்வுகளும் சேர்ந்ததுதான். அந்த உணர்வுகளை அழகான மெலடி வழியாகக் கடத்தும் வகையில் உருவாகியுள்ளது ‘ஆசை வரமே’ பாடல்.
“நேர நதி தீரும் வரை, நீல அலை ஓயும் வரை...” என்ற மென்மையான வரிகளுடன் தொடங்கும் இப்பாடல், காதலின் ஆழத்தையும், காதலர்களுக்குள் இருக்கும் பிரிக்க முடியாத பந்தத்தையும் இசையுடன் பதிவு செய்கிறது. பாடலாசிரியர் மெட்ராஷீ எழுதியுள்ள வரிகளுக்கு இசையமைப்பாளர் கோவிந்த் வஸந...
