அச்சம் என்பது மடமையடா வெற்றிக்கு நான் காரணமல்ல என்று சிம்பு
சிம்பு நடிப்பில் பல்வேறு தடைகளுக்கு பிறகு வெளிவந்திருக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’. இப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். மஞ்சிமா மோகன், சதீஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சிம்பு, இன்று சென்னையில் ரசிகர்களுடன் அமர்ந்து திரையரங்கில் இப்படத்தை பார்த்துள்ளார்.
படத்தை பார்த்துவிட்டு சிம்பு பேசும்போது, ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து இந்த படத்தை பார்க்கவேண்டும் என்று காத்திருந்தேன். தற்போது அவர்களுடன் சேர்ந்து பார்த்தது ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. இந்த நேரத்தில் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு தந்த கவுதம் மேனனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது நாட்டில் நிலவும் பணப்பிரச்சினைகளையும் மீறி படம் நல்ல வசூலை பெற்றிருக்கிறது என்று சொ...