சந்தானதை ஏமார்ற்றிய அனிருத் கை கொடுத்த சிம்பு
சந்தானத்தின் பரமபத மேப், சத்தியமாக நம்ம சிம்புதான்! விஜய் தொலைக்காட்சியில் வெறும் காமெடி தொகுப்பாளாராக இருந்தவரை சினிமாவுக்கு கொண்டு வந்தவரே சிம்புதான். அந்த நம்பிக்கையை சிம்பு விஷயத்தில் காப்பாற்றி வருகிறார் சந்தானம். கால்ஷீட் தேதிகளால் கசக்கப்பட்ட காலங்களில் கூட, சிம்பு அழைக்கிறார் என்றால் பிற படங்களை போட்டது போட்டபடி போட்டு விட்டு ஓடி வருகிற அளவுக்கு அவரை உயரத்தில் வைத்துப் போற்றி வருகிறார் சந்தானம். இந்த குரு தட்சணைக்கு சிம்பு கொடுக்கப் போகும் இன்னொரு சிறப்புதான் இங்கே நாம் சொல்லவிருக்கும் விஷயம்.
கடந்த சில மாதங்களாகவே அனிருத்தை விரட்டி வருகிறார் சந்தானம். தனது படம் ஒன்றுக்கு இசைமைக்கக் கேட்டு தொடர் தொல்லை கொடுத்து வரும் இவரை, அவர் கண்டு கொள்ளவே இல்லை. காரணம்? சிவகார்த்திகேயனுக்கும் அனிருத்துக்குமான பந்தம் அப்படி. இவரும் அவரும் எதிரி. இவர் படத்திற்கு இசையமைத்தால், அவர் கோபித்துக் கொ...
