இந்திய சினிமாவின் தனித்துவ இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்
இந்திய சினிமாவின் தனித்துவ இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்
சென்னை: இந்திய சினிமாவில் புதுமையான கதை சொல்லல், நகைச்சுவை, கற்பனை மற்றும் தொழில்நுட்பப் பரிசோதனைகளுக்கு தனி முத்திரை பதித்த இயக்குநர்களில் ஒருவரான சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.
1931 செப்டம்பர் 21 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் குடூரில் பிறந்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், இளம் வயதிலேயே நாடகம் மற்றும் இசையில் ஆர்வம் கொண்டிருந்தார். சென்னை பிரசிடென்சி கல்லூரியில் இயற்பியல் படித்த அவர், பின்னர் புகழ்பெற்ற இயக்குநர் கே.வி. ரெட்டியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். மாயாபஜார் உள்ளிட்ட முக்கியமான படங்களின் உருவாக்கப் பணிகளை அருகிலிருந்து கற்றுக்கொண்டார்.
1972ஆம் ஆண்டு தெலுங்கில் Neethi Nijayithi திரைப்படத்தின் மூலம் இய...
