நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிப்பதே கஷ்டம் – நடிகர் கார்த்தி
நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிப்பதே கஷ்டம் , நேர்மையான அதிகாரியாக இருப்பது அதைவிட கஷ்டம் ... – முன்னாள் போலீஸ் அதிகாரிகளின் பொதுநல அறக்கட்டளை துவக்க விழாவில் நடிகர் கார்த்தி நேற்று , ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் இணைந்து அமைத்துள்ள அறக்கட்டளையின் துவக்க விழா நடந்தது. இதில் நடிகர்கள் சிவகுமார் , கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த கார்த்தி ...
தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்த பிறகு பொது மக்களில் ஒருவனாக போலீஸ் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருப்பது மிகவும் கஷ்டமான ஒன்று. நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது எனக்கு. இங்கே நேர்மைக்காக கொடுக்க வேண்டிய விலை இன்னும் பெரிதாக உள்ளது. இதனால் அதிகம் பாதிக்கபடபோவது யாரு என்று பார்த்தால் அவர்களு...
