டெடி திரைவிமர்சனம் (ரேட்டிங் 3/5)
வித்தியாசமான கதையை படமாக்குவதற்கு பெயர் போன சக்தி சௌந்தர்ராஜன் டெடி படம் மூலம் மீண்டும் வித்தியாசமான முயற்சியில் இறங்கியிருக்கிறார். உடல் உறுப்பு கடத்தல் செய்யும் மெடிக்கல் மாபியாவால் ஸ்ரீ(சயீஷா) கடத்தப்படுவதுடன் படம் துவங்குகிறது.
அவருக்கு மருந்து செலுத்திய பிறகு கோமா நிலைக்கு சென்றுவிடுகிறார். அதன் பிறகு சயீஷாவின் ஆத்மா ஒரு டெடி பொம்மைக்குள் சென்றுவிடுகிறது. நம்ப முடியவில்லை தான், ஆனால் படத்தில் அப்படித் தான் காட்டியிருக்கிறார்கள். அந்த டெடி பொம்மை ஓசிடி மற்றும் புதிதாக எதையாவது கற்றுக் கொள்ளும் திறன் கொண்ட சிவாவுடன்(ஆர்யா) நட்பாகி ஸ்ரீ உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்கிறது.
புதுமையான கதையை திரையில் காட்டுவது சாதாரண விஷயம் அல்ல. அதில் இயக்குநருக்கு முழு வெற்றி கிடைக்காவிட்டாலும் அவரின் முயற்சியை பாராட்ட வேண்டும். டெடி பொம்மை செய்யும் காரியங்கள், அதற்கும் ஆ...
