Wednesday, January 14
Shadow

Tag: #vaaVaathiyaar #karthi #krituisalon #review #Sathyaraj #karunakaran

வா வாத்தியார் – திரை விமர்சனம் (ரேங்க் 2 /5)

வா வாத்தியார் – திரை விமர்சனம் (ரேங்க் 2 /5)

Latest News, Review
வா வாத்தியார் – எதிர்பார்ப்பை ஏமாற்றிய நலன் குமாரசாமியின் வீழ்ச்சி ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ என இரண்டு கல்ட் படங்களை கொடுத்த நலன் குமாரசாமி, பல ஆண்டுகள் கழித்து திரும்பியிருக்கும் படம் ‘வா வாத்தியார்’. ஏகப்பட்ட தடங்கல்கள், ரிலீஸ் தள்ளிப்போன கதைகள், பெரிய நட்சத்திரப் பட்டாளம் – எல்லாவற்றையும் வைத்து பார்க்கும்போது இந்த படம் ஒரு ஸ்ட்ராங்க் கம்பேக் ஆக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே இருந்தது. ஆனால் திரையில் வந்த பிறகு அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் சுக்கு நூறாக்கி விட்டது ‘வா வாத்தியார்’. எம்ஜிஆர் பக்தி, அரசியல் ஃபேண்டஸி, சமூக அநீதி, இரட்டை வேடம் என எல்லாவற்றையும் ஒரு மிக்சர் ஜாரில் போட்டு அரைத்த மாதிரியான குழப்பமான திரைக்கதை. ஒரு தெளிவான ஜானர் கூட இல்லை. எம்ஜிஆரின் அவதாரமாக பேரனை வளர்க்கும் தாத்தா, சூழ்நிலையால் திருந்தும் ஹீரோ, அநீதிக்கு எதிராக போராடும் வாத்திய...