உலக சாதனை படைத்த உள்ளூர் தமிழன்!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கருமாத்தூர் அருளானந்த கல்லூரி சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் குமார் ஒரு உலக சாதனை முயற்ச்சி செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்
தற்போதைய காலகட்டத்தில் மீதி வண்டி ஓட்டுவதே மிக சிரமான காரியமாக பலரும் எண்ணும் வேளையில் சுமார் ஏழு மணி நேரம் இடை விடமால் மீதி வண்டி ஒட்டி அதவும் இரு கைகளையும் பிடிக்காமல் ஓட்டினார் அதுவே பெரும் சிறப்பு காலை தொடங்கி மிக சரியாக 6.52 மணி துளிகள் இடைவிடமால் கை பிடிக்காமல் மீதி வண்டி ஒட்டி சாதனை படைத்து உள்ளார் அதிலும் கடைசியாக நமது நாட்டு தேசிய கொடியை பிடித்து கொண்டு மீதி வண்டியை செலுத்தும் பொழுது அங்கு கூடி இருந்தவர்கள் மத்தியில் பெருத்த ஆராவாரம் கரை புரண்டு வந்தது
போட்டி முடிந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த வீரர் விக்னேஷ் குமார் தனக்கு முழு ஆதரவு கொடுத்து தன்னை ஊக்க படுத்திய தனது அண்ணன் திரு விமல் அவர்களுக்கும் தனது சகோதரி ...
