விஜய்யுடன் விஜய் சேதுபதி மோதல்
தமிழ் சினிமாவில் தற்போது மோதல் காலம் என்று சொல்லணும் ஒரே தாக்குதலாக இருக்கு இப்ப மோதல் விஷால் விஜய் மோதல் அஜித் ரசிகர்கள் அட்டு பயனுடன் மோதல் இப்ப என்னடான்ன விஜய் சேதுபதி விஜய்யுடன் மோதல்
அனேகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்துக்கு கவன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கும் இப்படத்தில் டி.ஆர், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இதன் படப்பிடிப்பு தற்போது 90% முடிந்துள்ளது. மேலும் இப்படம் வரும் பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
அதேநாளில் விஜய்யின் பைரவா மற்றும் விஷாலின் கத்தி சண்டை படங்களும் வெளியாவது குறிப்பிடத்தக்கது....
