விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கும் “வெண்ணிலா கபடி குழு – 2”
விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் செல்வசேகரன் இயக்குகிறார் - இயக்குநர் சுசீந்திரன் வழங்கும் "வெண்ணிலா கபடி குழு - 2"
7 வருடங்களுக்கு முன் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த திரைப்படம் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு. இப்படம் மூலம் விஷ்ணு விஷால் , சூரி , அப்பு குட்டி போன்ற திறமையான நடிகர்கள் அறிமுகமானார்கள். இவர்களை அறிமுகபடுத்திய இயக்குநர் சுசீந்திரன் இயக்கி இருந்த இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. மறுபடியும் கபடியை மையமாக கொண்டு எடுக்கப்படவுள்ள இப்படம் வெண்ணிலா கபடி குழு-2 என தயாராகுகிறது.
இப்படத்தை சுசீந்திரன் வழங்க சாய் அற்புதம் சினிமாஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் விக்ராந்த் நாயகனாக நடிக்கிறார். அவரது ஜோடியாக அர்த்தனா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மேலும் பசுபதி , கிஷோர் , சூரி , ரவி மரியா , யோகி பாபு , அப்பு குட்டி , லக்ஷ்மி , பாவா லக்ஷ்மணன் , திருமா ...
