வர இருக்கும் தேர்தலில் போட்டி – விஷால் அதிரடி அறிவிப்பு! வர இருக்கும் தேர்தலில் போட்டி – விஷால் அதிரடி அறிவிப்பு!
நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற செயலாளர் பதவியில் அமர்ந்த விஷால், உடனடியாக தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு, தனது அம்மா பெயரில் ஆரம்பித்த தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்ய தொடங்கினார்.
இதன் மூலம், விஷால் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாக கூறப்பட்ட நிலையில், விஷாலே தற்போது பல பேட்டிகளில், மக்களுக்கு உதவி செய்ய பதவி தேவை என்றால், அந்த பதவியில் அமர நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன், என்று கூறி வருகிறார்.
இந்த நிலையில், வர இருக்கும் தேர்தலில் தான் போட்டியிடுவேன், என்று விஷால் அறிவித்துள்ளார். ஆனால், இது சட்டமன்ற தேர்தல் அல்ல, அடுத்த நடிகர்கள் சங்க தேர்தலில்.
இன்று நடிகர் சங்கத்தின் 64 வது பொதுக்குழு சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்று...
