
யாரோ திரை விமர்சனம் 3/5
நாயகன் ஜான், ஒரு தனியார் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். சென்னையில் கடலோரத்தில் ஒரு மிகபெரும் பங்களாவில் தனியாக வசித்து வருகிறார்.
இவர் வசிக்கும் அந்த பங்களாவில் யாரோ ஒருவர் தன்னுடன் இருப்பதாக உணர்கிறார் ஜான். அதன் காரணமாக, தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து பார்க்கும்படி சொல்கிறார். அவர்கள் பார்க்கும்போது அங்கு வேறு யாரும் இல்லை எனக் கூறி சென்று விடுகின்றனர்.
ஒருநாள், தனது வீட்டிற்குள் இருந்து கேமரா ஒன்றை எடுக்கிறார். அந்த வீடியோ கேமராவில், யாரோ ஒருவர் ஒரு பெரியவரை கொலை செய்யும் வீடியோ ஒன்று அதில் இருக்கிறது. இதைக் கண்டதும் ஜான் அதிர்ச்சி அடைகிறார். கொலை செய்யும் நபரின் முகம் அதில் தெரியாமல் இருக்கிறது.
இறுதியாக, அந்த வீடியோவில் கொலை செய்த நபர் யார்.? கொலை செய்யப்பட்ட நபர் யார் .?? ஜானை சுற்றி வரும் அந்த மர்ம நபர் யார்.? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கு...