‘கவலை வேண்டாம்’ படத்தின் விநியோக உரிமையை வாங்கி இருக்கிறார் ‘அபி அண்ட் அபி’ நிறுவனத்தின்
'காதலுக்கு எந்தவித எல்லையும் கிடையாது' என்பதை மைய கருத்தாக கொண்டு உருவாகி இருக்கிறது, ஜீவா - காஜல் அகர்வால் நடித்து, அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாக இருக்கும் 'கவலை வேண்டாம்' திரைப்படம். 'யாமிருக்க பயமே' படப்புகழ் டீகே இயக்கி, RS இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து இருக்கும் இந்த 'கவலை வேண்டாம்' படத்தில், வர்த்தக வெற்றிக்கு தேவையான அனைத்து சிறப்பம்சங்களும் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. எனவே காதல் கலந்த காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த 'கவலை வேண்டாம்' படத்தின் விநியோக உரிமையை பெற பல முன்னணி விநியோகஸ்தர்கள் போட்டியிட, இறுதியாக இந்த படத்தின் விநியோக உரிமையை "அபி அண்ட் அபி' நிறுவனத்தின் சார்பில் வாங்கியிருக்கிறார் அபினேஷ் இளங்கோவன்.
"தமிழ் சினிமாவில் என்றுமே காதலுக்கும் - நகைச்சுவைக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும். ஒரு படத்தின் வெற்றிக்கு க...
