ஜே.கே.ரிதீஷ் தயாரிக்கும் “தப்பாட்டம்”
நடிகராகவும் அரசியல் பிரமுகராகவும் பலராலும் நன்கு அறியப்பட்டவரான ஜே.கே.ரிதீஷ் Ex MP, தனது தயாரிப்பு நிறுவனம் சாகியா செல்லுலாய்ட்ஸ் மூலம் "தப்பாட்டம்" எனும் படத்தை தயாரிக்கின்றார். இப்படம் இவர் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாகும்.
தப்படிக்கும் கலைஞனுக்கும், ஒப்பாரி வைக்கும் பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. இருவரும் ஊரே மெச்சும் சிறந்த தம்பதியாக வாழ்கின்றனர். இவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராவிதமாக ஒரு சம்பவம் நிகழ்ந்து இவர்களது உறவில் பிளவை ஏற்படுத்துகிறது. இருவராலும் பிரச்சனைகளை சமாளிக்க முடிந்ததா, மீண்டு வந்தார்களா என்பதை அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படி மிகவும் எதார்த்தமாக வடிவமைத்துள்ளார் இப்படத்தின் இயக்குனர் முஜிபூர்.
மனித உறவுகளின் மகத்துவத்தையும், உண்மையும் இப்படம் ஆணித்தனமாக கூறும்படி இருக்கும். இக்கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து 1980 பிண்ணனிகளில் நடக்கும்படியாக க...
