தமிழ் சினிமா டாப் 5 யில் “காஷ்மோர”
தோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் காஷ்மோரா. இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மூன்று கெட்டப்பில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக அண்மையில் வெளியானது.
இப்படத்தில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இப்படம் முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 40 கோடி வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.
இதன்மூலம் இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் முதல்வார முடிவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்களில் காஷ்மோராவும் இடம்பெற்றுள்ளதாம்....
