திருநாள்’ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஜீவா பேசினார்.
நல்ல படக்குழுவுக்கு எல்லாம் தானாக அமையும்: 'திருநாள்' படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஜீவா பேச்சு!
நல்ல படக்குழுவுக்கு எல்லாம் தானாக அமையும் என்று 'திருநாள்' படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஜீவா பேசினார்.
கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பில் எம்.செந்தில்குமார் தயாரிப்பில், ஜீவா, நயன்தாரா நடிப்பில் பி,எஸ்.ராம்நாத் இயக்கத்தில் உருவான 'திருநாள்' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதை முன்னிட்டு படத்தின் வெற்றிக்கான மகிழ்ச்சி சந்திப்பு இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 'திருநாள்' படத்தின் நாயகன் நடிகர் ஜீவா பேசும்போது
''இன்று 'திருநாள்' படம்வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது என் வாழ்க்கையில் முக்கியமான படம். நான் 'யான்' படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும் போது ராம்நாத் இந்தக் கதையை என்னிடம் கூறினார். இது உங்களுக்காக தைக்கப...
