நான் கள்ளனும் இல்லை… காதலனும் இல்லை!- சௌந்தரராஜா
தர்மதுரை” படத்தில் விஜயசேதுபதியின் தம்பியாகவும், “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” படத்தில், யங் டிராபிக் ராமசாமியாகவும்… அனைவராலும்பாராட்டப்பட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார், நடிகர் சௌந்தரராஜா.
“கத்திச்சண்டை” படத்தில் விஷாலின் நண்பனாகவும், “கள்ளன்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், “ஒரு கனவு போல” படத்தில் கதைநாயகர்களில்ஒருவராகவும் நடித்துள்ளார் சௌந்தரராஜா. அடுத்தடுத்து படங்கள் வெளியாவது ஒரு பக்கம் இருக்க, ஹீரோவாக நடிக்க கதைகள் வந்துகொண்டிருப்பதில் மிகஉற்சாகமாக இருக்கிறார். ஆனால், ஒரு கனவு போல படத்திலும் மற்றும் “கள்ளன்” படத்திலும் சௌந்தரராஜாவின் கேரக்டர் பற்றி கசிந்துள்ள தகவல்கள் அவரைபரபரப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது.
அது பற்றி சௌந்தரராஜாவிடம் கேட்டபோது, “ஒரு கனவு போல” படத்தில் நடித்தது நிஜமாகவே மகிழ்ச்சியான விஷயம். ஸ்ரீதர் சார், பாலசந்தர் சார், பாரதிராஜாசார், பாக்கியராஜ் சார...
