யாக்கை பட இயக்குனரின் உயிரை காப்பாற்றிய நடிகை சுவாதி
வலுவான தமிழ் சொற்களை தலைப்பாக கொண்ட திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் கொஞ்சம் குறைவு தான்....ஆனால் தலைப்புக்கு ஏற்றார் போல் அந்த சில திரைப்படங்களின் கதை களம் வலுவானதாக இருக்கும். அப்படி ஒரு தரமான கதையம்சத்தில் உருவாகி இருப்பது தான் இயக்குனர் குழந்தை வேலப்பன் இயக்கத்தில், 'பிரிம் பிச்சர்ஸ்' முத்துக்குமரன் தயாரித்து இருக்கும் 'யாக்கை' திரைப்படம். மனதை வருடும் இசையால் இசை பிரியர்களை தன் பிடியில் வைத்திருக்கும் யுவன்ஷங்கர் ராஜா இந்த யாக்கை படத்திற்கு இசையமைத்திருக்கிறார் . கிருஷ்ணா மற்றும் சுவாதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யாக்கை படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, இன்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் விமர்சையாக நடைபெற்றது.
இயக்குனர் கரு பழனியப்பன், இயக்குனர் விஷ்ணு வர்தன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற இந்த விழாவில், தயாரிப்பாளர் 'பட்டியல்' சேகர், தயாரிப்...
