வீரபாண்டியபுரம் திரை விமர்சனம் (ரேட்டிங் 2.5/5)
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய், நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில் வெளியாகியுள்ள வீரபாண்டியபுரம் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.
திண்டுக்கல் மாவட்டம் வீரபாண்டியபுரம் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த நாயகி மீனாட்சி இவருக்கும் ஜெயிக்கும் காதல் ஏற்படுகிறது. இந்த காதல் பெற்றோர்கள் சம்மதமில்லாமல் திருமணம் வரை செல்கிறது. தாலிகட்டும் கடைசி நேரத்தில் மனம் மாறுகிறார் ஜெய். பிறகு ஜெய் மீனாட்சியின் தந்தை சரத்திடம் திருமணத்திற்காக சமரசம் பேசுகிறார்.
இது ஒருபுறம் இருக்க இன்னொரு புறம் நெய்க்காரப்பட்டி தலைவர் ஜெயபிரகாஷ் குடும்பத்திற்கும் சரத் குடும்பத்திற்கும் தீராத பகை இருந்து வருகிறது. இரண்டு குடும்பத்துக்கும் உள்ள பகை என்ன? இதற்கும் ஜெய்க்கும் என்ன சம்பந்தம்? இறுதியில் நின்று போன திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.
சிவா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெ...
