ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னின் அதிரடி சண்டையில் நயன்தாரா
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெருகி கொண்டே வருகிறது.... பெண்மையையும் அதன் மகிமையையும் பாராட்டி, இந்த 2016 ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான சில திரைப்படங்களே அதற்கு சிறந்த உதாரணம்...ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா விமர்சகர்களின் அமோக பாராட்டுகளையும் பெற்ற அந்த திரைப்பட வரிசையில் தற்போது இணைய தயாராக இருக்கின்றது, கோபி நாயனார் இயக்கத்தில், நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படம். ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கிட்டத்தட்ட நிறைவு பெற்று இருக்கிறது...
'கே ஜெ ஆர் ஸ்டுடியோஸ்' சார்பில் கோட்பாடி ஜெ ராஜேஷ் தயாரித்து , புதுமுக இயக்குனர் கோபி நாயனார் இயக்கி வரும் இந்த பெயர் சூட்டப்படாத திரைப்படத்தில், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், படத்தொகுப்பாளர...
