கர்ணனின் காவியம் திரையில் புதிய பிரம்மாண்டத்தில் – ‘மஹாவீர் கர்ணா’வில் ராகவா லாரன்ஸ்!
கர்ணனின் காவியம் திரையில் புதிய பிரம்மாண்டத்தில் – ‘மஹாவீர் கர்ணா’வில் ராகவா லாரன்ஸ்!
ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாண்டப் படைப்பு – ரமேஷ் வர்மா இயக்கத்தில் ஐந்து மொழிகளில் தயாராகிறது
இந்திய சினிமாவில் இதிகாசக் கதைகளைப் பிரம்மாண்டமான திரை அனுபவமாகக் கொண்டுவரும் முயற்சியில் மற்றுமொரு முக்கியமான படைப்பு உருவாகிறது. மகாபாரதத்தின் புகழ்பெற்ற வீரர்களில் ஒருவரான கர்ணனின் வாழ்க்கையையும், அவரது வீரத்தையும், கௌரவத்தையும், விசுவாசத்தையும், தியாகத்தையும் மையமாகக் கொண்டு உருவாகும் ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தில் கர்ணனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.
பென் மூவீஸ் நிறுவனத்தின் ஜெயந்திலால் கடா வழங்கும் இப்படத்தை, ஆர்வி ஸ்டூடியோஸ் மற்றும் ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கின்றன. இப்படத்தை இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்குகிறார்.
சுமார் ரூ.150 கோடி பட்...
