
ZEE5-இல் சாதனை படைக்கும் “தடயம்” – நன்றி அறிவிப்பு விழாவில் மகிழ்ச்சி பகிர்ந்த படக்குழு!
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5-இல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தமிழ் ஒரிஜினல் வெப் சீரிஸ் “தடயம்”, வெளியான சில நாட்களிலேயே பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. உண்மை சம்பவங்களின் பின்னணியில் உருவான இந்த க்ரைம் த்ரில்லர் தொடர், பரபரப்பும் மர்மமும் கலந்த கதைக்களத்தால் ரசிகர்களையும் விமர்சகர்களையும் ஈர்த்துள்ளது.
தமிழில் இதுவரை வந்த க்ரைம் கதைகளிலிருந்து வித்தியாசமான அணுகுமுறையுடன் உருவாகியுள்ள “தடயம்”, வெளியான குறுகிய காலத்திலேயே இந்த அளவிலான பார்வையை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாக பார்க்கப்படுகிறது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடும் வகையில், “தடயம்” சீரிஸ் படக்குழு பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வில் ZEE5 நிர்வாகிகள், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்தனர்.
ZEE5 சார்பில் பேசிய கௌஷிக் நரசிம்மன்,
“ஒரு வெப் சீரிஸ் வெளியான பிறகு அதன் முழு வரவேற்பை பல வாரங்களுக்குப் பிறகுதான் பார்க்க முடியும். ஆனால் ‘தடயம்’ சீரிஸ் அதற்கு விதிவிலக்காக, ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்துள்ளது. இது மிகப் பெரிய சாதனை. இதற்கு முக்கிய காரணம் பார்வையாளர்களின் ஆதரவே. அவர்களுக்கெல்லாம் எங்களின் மனமார்ந்த நன்றி,” என்று தெரிவித்தார். மேலும் ZEE5-ல் முன்பு வெளியான விலங்கு, அயலி போன்ற தொடர்களும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், மிகவும் குறுகிய காலத்தில் இந்த அளவிலான பார்வையை ‘தடயம்’ பெற்றிருப்பது பெருமைக்குரியது என்றும் கூறினார்.
Cocktail Cinemas தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா பேசும்போது,
“‘தடயம்’ சீரிஸுக்கு கிடைத்திருக்கும் இந்த அன்பும் ஆதரவும் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. இது எனது தயாரிப்பாளராக முதல் முயற்சி. அந்த முதல் முயற்சியே இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த வெற்றி முழுக்க முழுக்க எங்கள் டீமின் உழைப்பும் ரசிகர்களின் ஆதரவும் தான்,” என்று கூறினார்.
இசையமைப்பாளர் விபின் பாஸ்கர் கூறுகையில்,
“இந்த சீரிஸில் பணியாற்றிய காலத்தில் பல சவால்கள் இருந்தாலும், நல்ல படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றினோம். இன்று அது ரசிகர்களிடம் சென்றடைந்ததை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி,” என்றார்.
ஒளிப்பதிவாளர் KK தனது மகிழ்ச்சியை பகிர்ந்து,
“என் முதல் மேடை அனுபவமே ஒரு வெற்றி விழாவாக அமைந்துள்ளது. இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு என் நன்றி,” என்று தெரிவித்தார்.
எடிட்டர் தினேஷ் குமார் பேசும்போது,
“இயக்குநர் நவீன் அண்ணா ஸ்கிரிப்டை கொடுத்து படிக்கச் சொன்னபோது, இது ரசிகர்களை நிச்சயம் கவரும் என்று நாங்கள் நம்பினோம். அந்த நம்பிக்கை இன்று உண்மையாகியுள்ளது,” என்றார்.
இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் தனது உரையில்,
“இந்த வெற்றிக்கு பலரின் ஆதரவு காரணம். குறிப்பாக ZEE5 குழுவின் நம்பிக்கையும், தயாரிப்பாளர் அஜய் மற்றும் எங்கள் முழு டீமின் உழைப்பும் தான் இந்த வெற்றிக்கு அடிப்படை. குறுகிய காலக்கெடுவில் — சுமார் 20 நாட்களுக்குள் — இந்த சீரிஸை முடிக்க வேண்டிய சவால்கள் இருந்தாலும், அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைத்ததால் இந்த சாதனை சாத்தியமானது,” என்றார்.
நடிகர் ராஜ்கிரண் தாஸ்,
“தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பாராட்டு செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இது எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கிறது,” என்று தெரிவித்தார்.
எழுத்தாளர் மற்றும் நடிகை கொற்றவை,
“‘தடயம்’ எனக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்தது. இந்த கதாபாத்திரம் எனக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது,” என்றார்.
மேலும் நிகழ்வில் பேசிய அழகன் தமிழ்மணி,
“இந்த சீரிஸை வீட்டில் பார்த்தபோது ஒரு வெப் சீரிஸ் போல அல்ல, ஒரு முழுமையான திரைப்படத்தைப் பார்த்த உணர்வு கிடைத்தது,” என்று பாராட்டினார்.
நடிகர் பிரேம் மற்றும் சமுத்திரகனி ஆகியோரும் இந்த சீரிஸின் வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்து, முழு குழுவினரின் உழைப்பை பாராட்டினர்.
இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ள “தடயம்” வெப் சீரிஸில் சமுத்திரகனி, சிவாதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1990களின் இறுதிக் கால தென்னிந்திய கிராமப்புறத்தை பின்னணியாகக் கொண்டு, தொடர் கொலைகளின் மர்மத்தை கண்டுபிடிக்க முயலும் காவல் அதிகாரியின் விசாரணையை மையமாகக் கொண்டு இந்த கதை நகர்கிறது.
தமிழ் பார்வையாளர்களுக்கென தரமான மற்றும் மண் மணம் மிக்க கதைகளை தொடர்ந்து வழங்கி வரும் ZEE5, “தடயம்” மூலம் மீண்டும் ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லர் அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. தற்போது இந்த சீரிஸ் ZEE5 தளத்தில் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

“Thadayam” Series Success Meet – Team Expresses Gratitude After Massive Response on ZEE5
The Tamil original web series “Thadayam”, which premiered on the leading Indian OTT platform on February 27, has achieved a remarkable milestone by crossing 100 million streaming minutes within just a few days of its release. The crime-thriller series, inspired by real-life incidents, has been receiving widespread appreciation from both audiences and critics for its gripping narrative and suspense-filled storytelling.
Unlike conventional crime thrillers in Tamil, “Thadayam” presents a unique investigative narrative rooted in realism. The fact that it reached 100 million streaming minutes in such a short span highlights the strong reception it has received among viewers.
To celebrate this achievement, the team of “Thadayam” met members of the press and media to express their gratitude for the overwhelming support and positive reviews.
Speaking on behalf of ZEE5, said that usually the complete response to a web series becomes evident only after several weeks of release. However, “Thadayam” crossed 100 million streaming minutes even before completing a week, which he described as a significant milestone. He also mentioned that while previous ZEE5 series such as Vilangu and Ayali had received strong responses, “Thadayam” achieved this level of viewership in a much shorter period. He thanked the viewers, stating that such success would not have been possible without their support.
Producer from expressed his gratitude, saying the love and appreciation for “Thadayam” has been overwhelming. He noted that this is his first project as a producer, and seeing it achieve such a massive success is extremely gratifying. He credited the entire team and the audience for making the success possible.
Music composer shared that the team faced several pressures while working on the series but remained focused on delivering a quality product. Seeing the audience appreciate their work now makes all the effort worthwhile.
Cinematographer expressed happiness at standing on stage at a success event for his first major project and thanked the producer and director for giving him the opportunity.
Editor said that when director first shared the script, the team immediately felt that the story would captivate audiences. He added that the current success proves that their belief in the project was right.
Director stated that the success of the series was the result of the support and dedication of many people. He particularly thanked the ZEE5 team and producer Ajay Krishna for their confidence in the project. He also mentioned that the entire series had to be completed within a tight schedule of around 20 days, and despite the challenges, the team’s commitment made the success possible.
Actor said he was delighted by the overwhelming response and revealed that appreciation messages have been pouring in from various parts of Tamil Nadu.
Writer and actress shared that “Thadayam” turned out to be a major opportunity in her career. She said the role gave her a new level of confidence as an artist.
Veteran television personality praised the series, stating that when he watched it at home, it did not feel like a web series but rather like watching a full-fledged film due to the quality of direction and technical work.
Actors and also congratulated the entire team and expressed happiness about the success of the series.
Written and directed by Naveenkumar Palanivel, “Thadayam” features Samuthirakani, , and several others in key roles. Set in a late-1990s South Indian rural backdrop, the series revolves around a police officer’s investigation into a series of mysterious murders.
Known for delivering rooted and unique stories for Tamil audiences, ZEE5 has once again presented a gripping crime-thriller experience through “Thadayam.” The series is currently streaming on the platform and continues to receive strong appreciation from viewers.
