
சிலம்பரசன் TR வெளியிட்ட ‘யூத்’ முன்னோட்டம் – கென் கருணாஸின் பள்ளி நினைவுகளை மீட்டெடுக்கும் புதிய முயற்சி
பாடகர், இசைக்கலைஞர், நடிகர் என பன்முகத் திறமையுடன் அறிமுகமான கென் கருணாஸ், தற்போது இயக்குநராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமாகும் திரைப்படம் ‘யூத் – Youth’. இந்தப் படத்தின் முன்னோட்டத்தை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான Silambarasan TR தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு,
படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநராக கென் கருணாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கென் கருணாஸுடன் மலையாள நடிகர் Suraj Venjaramoodu, Devadarshini, அனிஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்யான்ஷி யாதவ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் நடிகை Nalini சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார். இவர்களுடன் சின்னத் தமிழா, தாஜ் மோலா, கெட்டவன் மணிகண்டன், சுரேன் வின்சென்ட் போன்ற டிஜிட்டல் தளங்களில் பிரபலமான முகங்களும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கான ஒளிப்பதிவை விக்கி மேற்கொண்டுள்ளார். இசையை G. V. Prakash Kumar அமைத்துள்ளார்.
பள்ளி வாழ்க்கையில் மாணவர்கள் அனுபவிக்கும் சுத்தமான மகிழ்ச்சியும் நினைவுகளும் பின்னணியாக கொண்டு, பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்தப் படம் உருவாகியுள்ளது.
பார்வதா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கருப்பையா சி. ராம் மற்றும் சுலோச்சனா குமார் இணைந்து இந்தத் திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
ஏற்கனவே வெளியான படத்தின் பாடல்கள் சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வெளியிடப்பட்டுள்ள முன்னோட்டக் காட்சிகள்,
பார்வையாளர்களை அவர்களின் பள்ளிக் கால நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும் விதமாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
‘யூத் – Youth’ திரைப்படம் வரும் மார்ச் 19 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Silambarasan TR releases the preview of Ken Karunas’ ‘Youth’
The preview of the film ‘Youth’, which marks the directorial and acting debut of singer, musician and actor Ken Karunas, has been officially released. Leading Tamil actor shared the preview on his social media page and extended his wishes to the film’s team.
Directed by debutant Ken Karunas, the film features Ken Karunas in the lead role along with , , Anishma Anil Kumar, Meenakshi Dinesh and Priyanyanshi Yadav. Actress also makes her return to films after a brief gap through this project. Popular digital personalities such as Chinna Tamizha, Taj Mola, Kettavan Manikandan and Suren Vincent are also part of the cast.
The film’s cinematography is handled by Vicky, while the music is composed by . Set against the backdrop of school life, the film captures the innocence and joyful moments experienced by students, presented with entertaining elements.
‘Youth’ is produced by Karuppaiah C. Ram and Sulochana Kumar under the banner of Parvatha Entertainments Private Limited.
The songs from the film have already received a strong response on social media, garnering millions of views and increasing the anticipation for the movie. The newly released preview has also been well received, as its visuals remind audiences of their memorable school days.
The film ‘Youth’ is scheduled for a worldwide theatrical release on March 19.
