Monday, October 26
Shadow

தல அஜித் ரசிகர்களுக்கு தல கொடுக்கும் அதிரடி ட்ரிட்


தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். முழு வீச்சில் நடந்து கொண்டிருந்த இப்படத்தின் ஷூட்டிங், ஊரடங்கின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது வலிமை திரைப்படம் குறித்த முக்கிய தகவல் தெரிய வந்துள்ளது. இந்த மாதத்தின் இறுதியில் வலிமை படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 15 நாட்களுக்கு நடைபெறும் இந்த படப்பிடிப்பில் நடிகர் அஜித் சில நாட்கள் நடிக்கவுள்ளதாகவும் நம்பத் தகுந்த கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சும்மாவே நம்ம தல ரசிகர்கள் இணையதளங்களை அதிர செய்வார்கள் இப்ப சொல்லவா வேணும்