

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாக்கி வரும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி படத்தில் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன இலையா?.
இப்படத்திற்கு பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் ஜெயலலிதா பாத்திரத்தை ஏற்றுள்ளார்.
கங்கனா இந்த தலைவி படத்திற்காக கடும் பயிற்சிகளை மேற்கொண்டார்.
குறிப்பாக தமிழ் மொழி உச்சரிப்புக்காக பயற்சி பெற்று வரும் அவர், பரத நாட்டியம் பயிற்சியிலும் ஈடுபட்டார்.
இப்படத்தில் பரத நாட்டியம் முக்கியமான பங்குவகிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது
இதனிடையே ‘ இந்த ஜெயலலிதா வெற்றிகரமான அரசியல்வாதியாக மட்டுமின்றி மிகவும் பலமான பெண்மணியாக இருந்துள்ளார். சுயமாக முடிவெடுத்து வாழ்ந்துள்ளார். மொழி அறிவு, பரத நாட்டியம் என பல திறமைகளை கொண்டிருந்த ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு உண்மையாக இருக்க விரும்புகிறேன். நடுத்தர குடும்பத்தில் பிறந்து இளம் வயதில் சினிமா துறையில் நடித்து நிறைய வெற்றிகளை குவித்தவர் ஜெயலலிதா. அவரை போன்றுதான் நானும். எனவே எனக்கும், ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன’ என்றெல்லாம் பேட்டிக் கொடுத்த கங்கனா பரத ஸ்டில் ஒன்று இப்போ லீக் ஆகி இருக்குது
இந்தப் படம் வரும் ஜூன் 20ல் ரிலீஸாகுதாம்.
