இன்று தமிழ் சினிமா உலகத்தில் இல்லை இந்திய சினிமா உலகில் மிகவும் பரபரப்பனவர் என்றால் அது தளபதி விஜய் காரணம் இவரின் முந்தய படம் சர்காரும் அடுத்த படமும் தான் ஆம் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தளபதி 63 இந்த படத்துக்கு மிகவும் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது அட்லீயுடன் மூன்றாவது படமடுத்து படத்தின் கதையை பற்றி பல வதந்திகள் வந்துள்ளது ஆனால் இது அரசியல் படமோ போலீஸ் படமோ இல்லையாம்
சர்கார் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் படத்தை அட்லீ இயக்குகிறார். தெறி, மெர்சலுக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இதனை 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார். விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். வில்லு படத்திற்கு பிறகு இருவரும் இணைகிறார்கள். இவர்கள் தவிர யோகி பாபு, விவேக் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு.
இது விளையாட்டை மையமாக கொண்ட படம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதனால் படத்தின் தலைப்பு ஜெர்சி 63 என தகவல் பரவியது. விஜய் கில்லி படத்தில் கபடி வீரராக நடித்தார், இந்தப் படத்தில் விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார். என்ன மாதிரியான விளையாட்டு என்ற தகவல் வெளியாகவில்லை.
கிரிக்கெட் மற்றும் கபடி விளையாட்டு தொடர்பான நிறைய படங்கள் தயாராகி வருவதால் இதில் இந்த இரண்டைத் தவிர வேறு விளையாட்டு மையமாக இருக்கலாம் என்று தெரியவருகிறது. படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்குகிறது. சென்னை புறநகர் பகுதியில் இதற்காக விளையாட்டு மைதான செட் போடப்பட்டு வருகிறது. படம் அடுத்த ஆண்டு தீபாவளியன்று வெளிவருகிறது