தண்டட்டி திரை விமர்சனம்
பொதுவாக தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகள் என்றாலே கொஞ்சம் வலுவான கதையும் அர்த்தமுள்ள கதையமாக தான் இதுவரை நாம் பார்த்து ரசித்து வந்தோம் அந்த வகையில் இந்த படமும் அப்படி ஒரு சிறந்த படம் என்று கூறலாம். ஒரு ஆழமான அழுத்தமான காதலை அற்புதமான திரை கதையுடன் நகைச்சுவையாக சொல்லி இருக்கும் படம் தான் தண்டட்டி
இந்தப் படத்தில் பசுபதி ரோகினி விவேக் பிரசன்னா அம்மு அபிராமி தீபா மற்றும் பலர் நடிப்பில் கே எஸ் சுந்தரமூர்த்தி இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் ராம் சங்கையா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் தண்டட்டி.
பசுபதி தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர் ரோகினியை காதலிக்கிறார் இதை அவர்கள் பெற்றோர்கள் எதிர்க்கின்றனர் இதை மீறி இருவரும் திருமணம் செய்கிறார்கள் திருமணத்தன்று ரோகிணிக்கு பசுபதி தண்டத்தியை காதல் பரிசாக கொடுக்கிறார். அப்போது ரோகினி என் கட்டை எரியும் போதும் இந்த தண்டட்டி என்னுடன் தான் எரிய வேண்டும் என்று ஆசை கூறுகிறார். திருமணத்தன்று ரோகிணியின் பெற்றோர்கள் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருவரையும் பிரிக்கின்றனர் பசுபதியை அடித்து கிணத்தில் போட்டு விடுகிறார்கள் இதனால் ரோகிணி அவர் இறந்துவிட்டார் என்று நினைத்துக் கொள்கிறார் அவர் இருந்து அவன் இறந்து விட்டான் என்று அவருக்கு வேறு ஒரு திருமணமும் செய்து வைக்கிறார்கள். பல வருடங்கள் கழித்து மீண்டும் பசுபதி ரோகினியை சந்திக்கிறார் சந்தித்த சிறிது நேரத்திலே ரோகினி இறந்து விடுகிறார் ரோகிணியின் களத்தில் இருந்த தண்டியை அவர் அவரை எரிக்கும் போது அந்த தண்டத்தையும் சேர்த்து எரித்தாரா இல்லையா என்பது தான் மீதி கதை
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் பசுபதி மொத்த படத்தையே தாங்கி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் தன் கதாபாத்திரம் புரிந்து கதை கேட்ப மிக அற்புதமான ஒரு எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். ரொம்ப ஆழமான அழுத்தமான கதாபாத்திரம் அந்த கதாபாத்திரத்திற்கு இவரை தவிர வேற யாரும் பொருந்த மாட்டார்கள் என்று அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளார். தன் நடிப்பில் நவரசத்தை கொட்டி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் நகைச்சுவை நேரத்தில் நகைச்சுவையும் அதே போல நொச்சிப்பூர்வமான காட்சிகள் தன் உணர்ச்சியை கொட்டி இருக்கிறார் சண்டை காட்சிகளிலும் கோவப்படுவதும் மிக அற்புதமாக தன் நடிப்பை வெளிப்படுத்தி மக்களை ரசிக்க வைத்திருக்கிறார் பசுபதி
ரோகினி இந்த கதாபாத்திரம் செய்தவருக்கு நிச்சயமாக அவர பாராட்டியாக வேண்டும் வேறு யாரும் இந்த கதாபாத்திரம் நடிப்பார்களா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி காரணம் பாதி படங்களில் இவர் பிணமாகத்தான் நடிக்கிறார். அற்புதமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஒரு வயதான கதாபாத்திரத்தில் இப்படி ஒரு நடிப்பை வேறு யாராலும் கொடுத்து கொடுக்க முடியாது என்பதை நிரூபித்திருக்கிறார். குறிப்பாக பஸ் ஸ்டாண்டில் பசுபதிகளோடு பேசும் காட்சிகள் மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். ஒருவரால் எவ்வளவு நேரம் பிணமாகவே நடிக்க முடியும் அதை மிக அற்புதமாக செய்திருக்கிறார். அதுவும் பலர் முன் தன் முன்னாடி உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டும் காமெடி செய்து கொண்டிருக்கும் நேரத்தில் தன் அசைவுகளை எதையும் வெளிப்படுத்தாமல் அற்புதமான நடிப்பு வெளிப்படுத்தி உள்ளார்.
அம்மு அபிராமி ஓரிரு காட்சிகள் வந்தாலும் நம் மனதில் பதிய வைக்கிறார் ரோகினின் சிறு வயதாக அம்மு அபிராமி கனகச்சிதமான தன் நடிப்பை கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
விவேக் பிரசன்னா ரோகினின் மகனாக நடிக்கும் விவேக் பிரசன்னா படம் முழுவதும் ஒரு குடிகாரனாக வருகிறார் அதுவும் பசுபதி மிரட்டும் ஒவ்வொரு காட்சிகளிலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஒரு நிஜ குடிகாரன் போலவே தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறது பாராட்டக்கூடிய விஷயம்.
படத்திற்கு மேலும் ஒரு பலம் என்று சொன்னால் தீபா தீபா என்றாலே கலகலப்பு ஆழமான நெகிழ்ச்சியான காட்சிகளும் இருக்கும் அதுபோலத்தான் இந்த படத்தில் ஆனால் இந்த படத்தில் வெறும் கலகலப்பு மட்டும் தான் அம்மாவை ஏமாற்றி சொத்து வாங்குவதற்காகவும் அம்மா இறந்தவுடன் இன்சூரன்ஸ் பணத்துக்காக அவர் போடும் வேஷம் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்த படத்தின் பலம் என்று சொன்னால் நடிகர் நடிகைகள் தான் இயக்குனர் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு கதாபாத்திரமும் அற்புதமான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார் இதுவே படத்திற்கும் மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது
இயக்குனர் ராம் சங்கையா இவருக்கு இது முதல் படம் தான் முதல் படத்தில் முத்திரை பதித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் அற்புதமான ஒரு கதையை எடுத்துக்கொண்டு வித்தியாசமாக நகைச்சுவையாகும் அதேபோல நெஞ்சில் உருக்கும் காதல் கதையாகவும் இந்த கதையை படைத்திருக்கிறார் இயக்குனர் ராம் சங்கையா மிக பலமான திரைக்கதை உருவாக்கி இருக்கிறார் கதைக்குத் தேவையான காமெடியையும் அதேபோல உணர்வு பூர்வமான காட்சிகளையும் கொடுத்திருக்கிறார் படம் முழுவதும் பெரிய ஒரு வயதானவர்களின் கூட்டத்தை வைத்து கதையை நகர்ந்து இருக்கிறார். எத்தனையோ கிராமத்து கதைகள் வந்துள்ளன ஆனால் இது மிகவும் எதார்த்தமான ஒரு கதை என்று தான் சொல்ல வேண்டும் இதற்காகவே இயக்குனர் ராம் சங்கையாவோ நான் பாராட்டியே வேண்டும்.
படத்தின் அடுத்த வாரம் என்று சொன்னால் இசையமைப்பாளர் கே. எஸ் . சுந்தரமூர்த்தி இயக்குனர் என்ன புரிந்து கதைக்குத் தேவையான பாடல்கள் தேவையான பின்னணி இசை கொடுத்து ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறார் இயக்குனருக்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறார்.
மொத்தத்தில் தண்டட்டி தங்க கட்டி குடும்பத்தோடு திரையரங்கு சென்று கொண்டாடலாம்.