Thursday, August 5
Shadow

சூர்யா மற்றும் ப்ரயகா ரோஸ் மார்டின் கதாப்பாத்திரங்கள் மிகவும் வித்தியாசமானது, உணர்வுபூர்வமானது – இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் !

தமிழ் சினிமாவில் பெருமளவில் பாராட்டுக்களை குவித்த, மிகச்சிறந்த படங்களை இயக்கி, தனக்கென தனிப்பெயர் பெற்றவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் தயாரிப்பு, நடிப்பு ஆகிய துறைகளிலும் களம் இறங்கி கலக்கி வருகிறார். விரைவில் வெளிவரவிருக்கும் Netflix ஆந்தாலஜி திரைப்படமான “நவரசா” திரைப்படத்தில் “கிடார் கம்பியின் மேலே நின்று” பகுதியை இயக்கியுள்ளார். இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் ‘காதல்’ உணர்வினை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், கமல் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யாவும், நேத்ரா கதாபாத்திரத்தில் நடிகை ப்ரயகா ரோஸ் மார்டினும் நடித்துள்ளனர்.

சூரியா நடித்த கதாபாத்திரம் குறித்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறுகையில்…
இந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் சூர்யா தான் எனது முதல் தேர்வாக இருந்தார். இப்பாத்திரத்தில் வேறு யாரும் நடிப்பதை நான் கற்பனை கூட செய்யவில்லை. அவருடன் இணைந்து பணியாற்ற மிக நீண்ட காலமாக காத்திருக்கிறேன். இந்தப்படம் அதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. திரையிலும் அது மிக அழகாக வெளிப்பட்டுள்ளது.

படத்தில் ப்ரயகா ரோஸ் மார்டின் கதாபாத்திரம் பற்றி அவர் கூறியதாவது…,

கமலின் வாழ்க்கையில் நேத்ரா புத்தம் புதிய சுவாச காற்றாக, வசந்தம் போல வருகிறாள். அவளின் குணம் நம் மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் வகையிலானது. ப்ரயகா ரோஸ் மார்ட்டின் இந்த கதாபாத்திரத்தை மிக அற்புதமான முறையில் நடித்துள்ளார். அவர் பேசும் விதம், தோற்றமளிக்கும் விதம், தலைமுடியுடன் விளையாடும் விதம், இந்த குணங்கள் வெறும் உடல் ரீதியானவை அல்ல. இதெல்லாம் கதாப்பத்திரத்தின் மனதோடு இணைந்தவை. அவர் இசையைப் பற்றி பேசிய விதமும் கதாபாத்திரத்துடன் இணைந்து கொண்ட விதமும் மிகுந்த ஆச்சர்யம் தருவதாக இருந்தது. திரையில் அது எப்படி வெளிப்படுகிறது என்பதை காண ஆவலுடன் உள்ளேன்.

தமிழ் திரையுலகின் 40 முன்னணி நடிகர்கள், ஆளுமை மிக்க இயக்குநர்கள், மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து பணியாற்றியிருக்கும் “நவரசா” ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று 190 நாடுகளில் வெளியாகிறது. மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை மையமாக கொண்டு, ஒன்பது பகுதிகளாக உருவாகியுள்ள, இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை, Madras Talkies மற்றும் Qube Cinema Technologies இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 208 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள் இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால் எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படததை நிறுத்தி, ஃபார்வேட் செய்து, எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும்.

சமீபத்திய தகவல்கள், புதிய செய்திகளுக்கு IG @Netflix_IN, TW @NetflixIndia and FB @NetflixIndia சமூக வலைதளங்களில் இணைந்திருங்கள்.

Known for many critically acclaimed titles, Gautham Vasudev Menon is an Indian film director, screenwriter, producer and actor who has worked extensively in Tamil film industry. He has directed the segment “Guitar Kambi Mele Nindru” in the upcoming Netflix anthology, ‘Navarasa’, which showcases the emotion – ‘love’. For this film, Suriya will be seen playing the character of Kamal while Pragya Rose Martin plays Nethra. 

Talking about the character played by Suriya, Director Gautham Vasudev Menon said “Suriya was my first choice for this character  and I don’t see anybody else playing this. I have been waiting to work with him for a very long time. This film was the best opportunity and it worked out very well.”

Talking about the character of Pragya Rose Martin in the film he said, “Nethra comes like a breath of fresh air in Kamal’s life. She speaks in a way that creates a lasting impression in our mind. Prayaga Rose Martin has performed the character in an edgy way. The way she talks, the way she looks, the way she plays with her hair, these traits are not physical. It’s all in her mind. The way she talks about music and connects with the characters is amazing. I am looking forward to seeing how it turns out.”

With a stellar lineup of over 40 cast members, talented directors and several film technicians, Navarasa will premiere exclusively on Netflix across 190 countries. The upcoming anthology showcases nine different emotions of love, laughter, anger, sorrow, courage, fear, disgust, surprise, and peace through nine beautiful tales. Produced by Madras Talkies and Qube Cinema Technologies. Navarasa will premiere on August 6, 2021. 

About Netflix:
Netflix is the world’s leading streaming entertainment service with 208 million paid memberships in over 190 countries enjoying TV series, documentaries and feature films across a wide variety of genres and languages. Members can watch as much as they want, anytime, anywhere, on any internet-connected screen. Members can play, pause and resume watching, all without commercials or commitments.

CLOSE
CLOSE