Tuesday, October 7
Shadow

வரவேற்பைப் பெற்றுவரும் “ரஜினி கேங்” ஃபர்ஸ்ட் லுக்!

வரவேற்பைப் பெற்றுவரும் “ரஜினி கேங்” ஃபர்ஸ்ட் லுக்!

மிஷ்ரி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற “ஜெய்ஹிந்த்” மற்றும் சமீபத்தில் வெளிவந்து வெற்றி கண்ட “அஷ்டகர்மா” படங்களுக்குப் பிறகு, தயாரிப்பாளர் ரஜினி கிஷன் நடித்து, இயக்குநர் எம். ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய ஹாரர் காமெடி திரைப்படம் “ரஜினி கேங்”.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் புதுமையான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களும், சினிமா ஆர்வலர்களும் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

மறைந்த எஸ். செயின்ராஜ் ஜெயின் அவர்கள் நிறுவிய மிஷ்ரி என்டர்பிரைசஸ், கடந்த மூன்று தசாப்தங்களாக திரைப்பட தயாரிப்பு, விநியோகம், பைனான்ஸ் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஜெய்ஹிந்த் மற்றும் அஷ்டகர்மா வெற்றிகளுக்குப் பிறகு, ரஜினி கேங் அவர்கள் நிறுவனத்தின் மூன்றாவது பெரிய தயாரிப்பாக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

காதலித்து ஊரை விட்டு ஓடும் ஒரு இளம் ஜோடி திருமணம் செய்ய முயலும் தருணத்தில், அவர்கள் எதிர்கொள்ளும் அமானுஷ்ய அனுபவங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து நடக்கும் அதிரடி, நகைச்சுவை சம்பவங்களைக் கலந்த கமர்ஷியல் ஹாரர் காமெடியாக இப்படம் உருவாகியுள்ளது.

பிஸ்தா, உப்பு புளி காரம், கனா காணும் காலங்கள் போன்ற வெப் சீரிஸ்களை இயக்கிய எம். ரமேஷ் பாரதி இப்படத்தையும் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ரஜினி கிஷன் நாயகனாகவும், திவிகா நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ், கூல் சுரேஷ், கல்கி ராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். “ப்ளூ” எனும் நாய் இப்படத்தின் முக்கியமான கதாப்பாத்திரமாக ரசிகர்களை கவரும் வகையில் நடித்துள்ளது.

எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ள இப்படத்தில் நான்கு இனிமையான பாடல்கள் இடம்பெற்றுள்ளன. முன்னதாக வெளியான டைட்டில் டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, 2.5 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மறைமலைநகர் பகுதிகளில் நடைபெற்றது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த வருட இறுதிக்குள் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக் குழு:
இயக்கம் – எம். ரமேஷ் பாரதி
இசை – எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட்
ஒளிப்பதிவு – என். எஸ். சதீஷ்குமார்
எடிட்டிங் – ஆர். கே. வினோத் கண்ணா
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)