Friday, March 6
Shadow

நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிட்டா லிவிங்ஸ்டன் கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று பரணி ஸ்டுடியோவில் நடைபெற்றது ….

நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிட்டா லிவிங்ஸ்டன் கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று பரணி ஸ்டுடியோவில் நடைபெற்றது ….

நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிட்டா லிவிங்ஸ்டன் கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தின் ( ப்ரொடக்ஷன் நம்பர் ஒன்) படத்துவக்க விழா பரணி ஸ்டுடியோ நடைபெற்றது,

இப்படத்தைப் பற்றி இயக்குநர் KS கிஷன் கூறுகையில்

இது ஒரு ஹாரர் திரில்லர் படம், இதில் கதாநாயகியாக ஜோவிட்டாவும் முக்கிய கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால், அயலி புகழ் மதன் , ஆதர்ஷ், மற்றும் லிவிங்ஸ்டன் நடிக்கிறார்கள்..

மேலும் இவர்களுடன் சேர்ந்து விஜே விஜய், கிருத்திகா
நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு இசை விக்னேஷ் ராஜா
ஒளிப்பதிவை சங்கீத் மணிகோபால் கவனிக்கிறார்.
இப்படத்தினை இராணுவத்தின் ஓய்வு பெற்ற அதிகாரி லோகேஸ்வரன்,பயோவன் கிரியேஷனிசம் எனும் பேனரில்
தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் கோபிசெட்டிபாளையத்தில் துவங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே செட்யூலாக நடத்தி முடிக்க உள்ளோம் என்றார்