
BR Talkies Corporation நிறுவனத்தின் சார்பில் பாஸ்கரன் பி., ராஜபாண்டியன் பி., டேங்கி ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் கே. பாலையா இயக்கத்தில், நடிகர்கள் சுரேஷ் ரவி மற்றும் யோகிபாபு இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
BR Talkies Corporation மற்றும் நடிகர் சுரேஷ் ரவி இணையும் இது இரண்டாவது திரைப்படமாகும்.
முன்னதாக BR Talkies Corporation நிறுவனம் தயாரித்த ‘காவல்துறை உங்கள் நண்பன்’ திரைப்படம் ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, இந்நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய படம், கிராமத்து பின்னணியில் அமைந்த நகைச்சுவை கலந்த குடும்பப்படமாக உருவாகி வருகிறது.
இயக்குநர் கே. பாலையா எழுதி இயக்கும் இப்படம், நகர வாழ்க்கை மற்றும் கிராமத்து வாழ்வியலை ஒப்பிட்டு சமூக அக்கறையுடன் வெளிப்படுத்தும் ஒரு காமெடி டிராமா ஆகும்.
இப்படத்தில் சுரேஷ் ரவி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, தீபா பாலு, பிரிகிடா சாகா, தேஜா வெங்கடேஷ், கருணாகரன், வேல ராமமூர்த்தி, ஆதித்யா கதிர், அப்பு குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
மதுரை, இராமநாதபுரம், தேனி, சென்னை உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 45 நாட்கள் நடைபெற்று படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் பி., ராஜபாண்டியன் பி., டேங்கி ஆகியோர் இணைந்து, இப்படத்தை பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
