Saturday, October 11
Shadow

பெண்களின் வாழ்வியல் சிக்கல்களையும் சமூகத்திற்கு எதிரான அவர்களின் சத்தமிடலையும் வெளிப்படுத்தும் “முட்டாள் எழுதிய கதை”

“வாழ்க்கை என்பது முட்டாள் ஒருவனால் எழுதப்பட்ட கதை. அது வெறும் ஆரவாரமும் வீண் ஆவேசமும் பூஜியத்தை மட்டுமே குறிக்கிறது.”
– வில்லியம் ஷேக்ஸ்பியர்

உலகில் மிக வலிமையானவர் பெண் தான். மாதந்தோறும் தன் உதிரத்தையே எதிர்கொள்ளும் சக்தி அவளுக்கே உண்டு. ஆனாலும், சமூகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வேட்டையாடப்படுபவள் பெண்ணே.

சமையலறை எனும் பாதுகாப்பான இடத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படாத சமுதாயத்தில் வாழ்கிறோம்.

எவ்வளவு பெரிய அறிவாளி, திறமைசாலி பெண்ணாக இருந்தாலும், இச்சமுதாயத்தில் எங்கோ ஒரு கட்டத்தில், ஒரு ஆண் அவளை வேட்டையாடியபடியே இருக்கிறான்.

ஒரு ஆண் தன் மகளைத் தெய்வமாகக் காண்கிறான்; ஆனால் அதே வயதுடைய மற்றொரு பெண்ணை வெறும் ‘செக்ஸ்-டாய்’ ஆகவே பார்ப்பதுதான் இச்சமூகம். பெண்கள் பல்வேறு வழிகளில் சுரண்டப்பட்டு அனுபவிக்கும் அநீதிகளுக்கும், அதனால் எழும் கோபத்திற்கும் உருவம்தான் “முட்டாள் எழுதிய கதை” என்கிறார் இயக்குநர் பா. ஆனந்தராஜன்.

இயக்குநர் பா. ஆனந்தராஜன் முன்னதாக கிச்சி கிச்சி, யுத்தகாண்டம் போன்ற படங்களை இயக்கியவர். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பாலா ஜி. இராமசாமி, இசை ஜோகன், எடிட்டிங் வில்சி, இணை இயக்கம் ரா. பிரதீப் குமார் ஆகியோர் மேற்கொள்கிறார்கள்.

இந்தக் கதையின் மையக் கதாபாத்திரங்களில் ரித்விகா, வினோதினி வைத்யநாதன், ரிஷா ஜகோப்ஸ், மது ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் யோக் ஜபீ, வேலு பிரபாகரன், நாஞ்சில் சம்பத், டி.எஸ்.ஆர், மரீனா மைக்கேல், KPY யோகி ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை எடிசன் திரை ஆலயம் சார்பாக வேணுகோபால் தயாரிக்க, தயாரிப்பு மேற்பார்வையை நம்பி மங்கை மேற்கொள்கிறார்.

மக்களின் ஆதரவோடு, பெண்களின் வாழ்வியல் சிக்கல்களையும் சமூகத்திற்கு எதிரான அவர்களின் சத்தமிடலையும் வெளிப்படுத்தும் “முட்டாள் எழுதிய கதை” திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

“Life is nothing but a story written by a fool, full of sound and fury, signifying nothing.”
– William Shakespeare

The most powerful being in the world is a woman. Month after month, she alone has the strength to face her own blood. She is always the one hunted by everyone.

Even in the kitchen, women are not given safety in this society.

No matter how intelligent a woman may be, in this society, somewhere, she continues to be hunted by men.

A man sees his own daughter as a goddess, but the same man looks at another woman of the same age as a sex toy. The anger of women who are exploited in various ways is what forms the theme of this film “A Story Written by a Fool,” says P. Anandharajan.

Previously, he has directed films such as Kichi Kichi and Yuthakandam. For this film, cinematography is by Bala G. Ramasamy, music by Johan, editing by Vilcy, and associate direction by R. Pradeep Kumar.

The heroines of this story are played by Riythvika, Vinodhini Vaidyanathan, Risha Jacobs, and Madhu. Along with them, actors like Yog Japee, Velu Prabhakaran, Nanjil Sampath, TSR, Marina Michael, KPY Yogi Raj, and many others have acted.

The film is produced by Venugopal on behalf of Edison Thirai Aalayam, with production supervision by Nambi Mangai. With the support of the people, this film is set to be released on screen very soon.