Wednesday, May 6
Shadow

டார்க் ஜெயின்ட்” திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது

டார்க் ஜெயின்ட்” திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது

 

தமிழ் சினிமாவில் வித்தியாசமான ஹாரர் திரில்லர் படமாக உருவாகி வரும் “டார்க் ஜெயின்ட்” திரைப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா நேற்று சென்னையிலுள்ள பரணி ஸ்டுடியோவில் எளிமையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.

இந்த படத்தின் மூலம் ஹாலிவுட் நடிகர் ரபிக் பாட்சா, முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் நடிகை சோனியா அகர்வால், இயக்குநர் பாக்யராஜ், லிவிங்ஸ்டன், அவரது மகள் ஜோவிட்டா, அயலி மதன், விஜய் டிவி புகழ் அமுதவாணன், ஆதர்ஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை இயக்குநர் K.S. கிஷன் இயக்குகிறார். இசையமைப்பாளராக விக்னேஷ் ராஜா பணியாற்ற, ஒளிப்பதிவை சங்கீத் மணிகோபால் கவனிக்கிறார்.
ஓய்வு பெற்ற ராணுவ வீரரான லோகேஸ்வரன், பயோவன் கிரியேஷனிசம் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோபிசெட்டி பாளையம் மற்றும் சென்னை பகுதிகளில் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
முழுக்க முழுக்க வித்தியாசமான கதை களத்தில் உருவாகி வரும் இந்த படம், ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரும் வகையில் ஹாரர் – திரில்லர் ஜானரில் தயாராகி வருகிறது.

  1. படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததும், முதல் பார்வை, இசை வெளியீடு நடத்தப்பட்டு, அதன் பின்னர் ஏப்ரல் மாதத்தில் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.