Thursday, May 30
Shadow

தேள் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில், பிரபுதேவா, சம்யுக்தா, ஈஸ்வரி ராவ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள தேள் படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

கொரியன் படமான PIETA வின் தழுவலாக தமிழில் உருவான திரைப்படம் தான் தேள்.

கதையின் நாயகனான பிரபுதேவாவிற்கு அவ்வளவு எளிதில் எதையும் புரிந்துகொள்ள இயலாது. இதனால் அவருக்கு எங்கேயுமே வேலைகிடைக்கவில்லை. இறுதியில் ஒரு தாதாவிடம் அடியாளாக வேலைசெய்கிறார். சிறிது காலம் கழித்து குட்டி தாதாவாக பிரபுதேவா உருவெடுக்கும்போது நான் தான் உன் அம்மா என்று ஈஸ்வரிராவ் வருகிறார்.இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் பிரபுதேவா.

போக போக ஈஸ்வரிராவின் பாசத்தைப்பார்த்த பிரபுதேவா இவர் தான் தன் அம்மாவாக இருப்பாரோ என்று என்னும் நேரத்தில் ஈஸ்வரிராவ் கொலைசெய்யப்படுகிறார். இறுதியில் ஈஸ்வரிராவ் ஏன் கொலைசெய்யப்பட்டார், அவரை கொலைசெய்தவரை பிரபுதேவா பழிவாங்கினாரா என்பதுதான் மீதி கதை.

எப்போதும் துள்ளலான நடனம், காமெடி என அசத்தும் பிரபுதேவா இப்படத்தில் மாறுதலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆக்க்ஷன் கதைக்களத்துக்கான ஹீரோவாக கனகச்சிதமாக பொருந்தியுள்ளார் பிரபுதேவா. அடுத்ததாக ஈஸ்வரிராவ் பிரபுதேவவிற்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெறுகிறார்.

கதாநாயகியாக வரும் சம்யுக்தாவும், காமெடியனாக வரும் யோகிபாபுவும் அவர் அவர் பாத்திரத்தை சரிவர செய்திருக்கின்றனர். படத்தில் இரண்டே பாடல்கள் என்றாலும் அதையும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் சத்யா. இயக்குனர் ஹரிகுமார் படத்தில் ஆக்ஷன், செண்டிமெண்ட், காமெடி , த்ரில்லர் என அனைத்தையும் கலந்து கலவையாக ரசிகர்கள் ரசிக்கும்படி இயக்கியுள்ளார்.